போர் பதற்றத்துக்கு மத்தியில் ஏவுகணைகள் சோதனை நடத்தி அதிர வைத்த ரஷியா.

உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ள ரஷியா, எந்த நேரத்திலும் அந்த நாட்டுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உக்ரைன் மீது போர் தொடுக்கப்போவதில்லை என்று கூறியுள்ள ரஷியா, உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வெளியேற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

அதேநேரம், உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக கூறும் ரஷியாவின் கூற்றில் உண்மை இல்லை என அமெரிக்காவும், உக்ரைனும் கூறியுள்ளன. அங்கு கடந்த ஜனவரி கடைசியில் 1 லட்சம் அளவுக்கு இருந்த ரஷிய படைகளின் எண்ணிக்கை தற்போது 1.90 லட்சம் வரை இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.இதனால் உக்ரைன் எல்லையில் நீடித்து வரும் போர் பதற்றம் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் மிகுந்த அச்சத்தில் உள்ளன.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா இன்று ஏவுகணை சோதனைகள் நடத்தி அதிரவைத்துள்ளது. ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளையும் ரஷியா வெற்றிகரமாக நடத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.