ரிலீசுக்கு ரெடியாக இத்தனை படங்களா.? வியக்க வைக்கும் விமல்.!

கடந்த பிப்ரவரி 18ல் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடித்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரிலீசானது.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது. எனவே இந்த படத்தை விமலின் கம்பேக் எனலாம்.

இதனையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் விமல். இந்த படத்திற்கு ‘குலசாமி’ என தலைப்பு வைத்துள்ளனர். வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி.

இத்துடன் விமல் கைவசம் உள்ள படங்கள் லிஸ்ட் இதோ

சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’, முத்துக்குமரன் இயக்கத்தில் ‘கன்னிராசி’ ஆகியவை வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இவை இல்லாமல் விமல் நடிப்பில் ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் ஒரு படம் என லிஸ்ட் நீள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.