மூன்றாம் உலக போர் அழிவுகரமான, அணு ஆயுத யுத்தமாக இருக்கும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்.

மூன்றாம் உலக போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை யுக்ரேன் வாங்க ரஷ்யா அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

யுக்ரேனுடன் ரஷ்யா எப்போது இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தும் என அவரிடம் கேட்டதற்கு, “அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது, ஆனால் யுக்ரேன் அமெரிக்காவின் கட்டளையை பின்பற்றுகிறது,” என்று பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.