யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு இன்று ஆரம்பம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாவது அமர்வு இன்று (03) ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பட்டமளிப்பு வைபவத்தின் எட்டு அமர்வுகளில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இன்றைய அமர்வுகளில் பட்டம் பெறும் பட்டதாரிகளின் விவரம் வருமாறு:-

அமர்வு 1

கலாநிதி – 01, மொழியியலில் முதுதத்துவமாணி – 01, கணக்கீட்டில் முதுதத்துவமாணி – 01, சைவ சித்தாந்தத்தில் முதுகலை மாணி – 31, மருத்துவமாணி சத்திர சிகிச்சை மாணி – 131, விவசாயத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) – 65, பொறியியல் விஞ்ஞான மாணி (சிறப்பு) – 55, சட்டமாணி 52

அமர்வு 2

புவியியலில் முதுதத்துவமாணி – 02, கல்வியியல் முதுதத்துவமாணி – 01, முது வியாபார நிர்வாகமாணி – 47,கலைமாணி (சிறப்பு) – 189, சித்தவைத்திய சத்திரசிகிச்சைமாணி – 38, தாதியியலில் விஞ்ஞான மாணி (சிறப்பு) – 24, மருந்தகவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) – 15, மருத்துவ ஆய்வுகூடவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) – 18.

அமர்வு 3

கலாநிதி – 01, சித்தவைத்தியத்தில் முதுதத்துவமாணி – 01, மெய்யியலில் முதுதத்துவமாணி – 01, சூழல்முகாமைத்துவத்தில் முது விஞ்ஞானமாணி – 14, கலைமாணி (சிறப்பு) – 132, கலைமாணி (பொது) – 05, விஞ்ஞானமாணி (பொது) – 174.

Leave A Reply

Your email address will not be published.