லொஹான் ரத்வத்தவிற்கு புதிய இராஜாங்க அமைச்சு!

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பதவியினை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அண்மையில் விலகியிருந்தார்.

இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.