துப்பாக்கிகளினால் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்தின் துப்பாக்கிகளினால் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது, ஆனால் அதை செய்ய முடியாது எனவும் இந்த பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாக தீர்க்கக்கூடிய ஒரு நிர்வாகம் இப்போது நாட்டிற்கு தேவை என்றும் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) வேட்பாளர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06) ஹோமாகம பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.