வாக்களிக்க வருவோர் கறுப்பு அல்லது நீல நிறத்தில் எழுதக் கூடிய பேனாவுடன் வர வேண்டும் – மகிந்த தேசப்பிரிய

சுகாதார நலன்களை அடிப்படையாகக்கொண்டு தனிமைப்படுத்தல் சட்டங்களின் பிரகாரம் பொதுத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஒத்திகை நடவடிக்கைகள் அம்பலாங்கொடையில் இன்றைய தினம் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றன.

இன்றைய தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது தேர்தலில் வாக்களிக்க தேர்தல் சாவடிகளுக்கு வரும் போது வாக்காளர்கள் வீட்டிலிருந்து கறுப்பு அல்லது நீல நிறத்தில் எழுதக் கூடிய பேனா ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் வாக்களார்கள் பின் பற்ற வேண்டிய விதி முறைகள் குறித்து வெகு விரைவில் அறிவிக்கும் ஊடக சந்திப்பொன்றை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.