தோல்விக்கு இது தான் காரணம்; ரவீந்திர ஜடேஜா வேதனை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், லக்னோ அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா, பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பந்தை சரியாக பிடிக்க கூட முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜடேஜா பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டோம். உத்தப்பாவும், சிவம் துபேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், பீல்டிங்கில் சொதப்பிவிட்டோம், சில கேட்ச்களை தவறவிட்டு விட்டோம், டி.20 போட்டிகளில் கேட்ச்கள் மிக முக்கியம். கிடைக்கும் ஒரு வாய்ப்பை வீணடித்தாலும் அது போட்டியையே மாற்றிவிடும்.

பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது, இதனால் பந்தை எங்களால் சரியாக பிடிக்க கூட முடியவில்லை. அடுத்த போட்டிக்கு முன்பு ஈரமான பந்துகளில் அதிக பயிற்சிகள் மேற்கொள்வோம். பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை, தவறுகளை அடுத்தடுத்த போட்டிகளில் சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.