இடைக்கால பிரதமர் பதவிக்கு 5 நபர்களது பெயர்கள் பரிந்துரை

அரசாங்கமும் எதிர்கட்சி அரசியல் கட்சிகளும் இணைந்து நியமிக்கவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு ஐவர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா,
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
மற்றும்
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை 10 சுயேச்சைக் கட்சிகள் அண்மையில் முன்னிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திரு.ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இடைக்கால அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பதவிக்காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சிரேஷ்ட மற்றும் இளைய உறுப்பினர்களைக் கொண்ட புதிய வகை செயற்பாடுகள் அமைச்சரவையொன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அது 10 உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட வேண்டிய அமைச்சுக்களை மீள இணைப்பதன் மூலம் பெருமளவிலான பணத்தை சேமிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த அமைச்சர்களின் அனைத்து முன்மொழிவுகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அவை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.