ஐந்து மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது

கொழும்பு, களுத்துறை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஐந்து மாவட்டங்களின் வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் முன் நிலுவையில் உள்ள பல வழக்குகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை இடைநிறுத்த நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியைத் தொடர்வது வழக்கம். நீதிமன்றங்கள் இதுவரை அத்தகைய இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கவில்லை.

பிரதான தேர்தல் மாவட்டங்கலான கொழும்புஇ குருநாகல் மற்றும் களுத்துறை ஆகியவை அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் மாவட்டங்கள். இந்த சூழ்நிலையில், இந்த மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் தொடர்பாக வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது குறித்து ஆரம்பத்தில் அதிகாரிகள் அக்கறை கொண்டிருந்ததாக அரசாங்க அச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 6 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுகின்றது:

இருப்பினும்இ பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலல்லாமல், வாக்குச் சீட்டுகள் மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு தனித்தனியாக அச்சிடப்பட வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் வேறுபட்டவர்கள்.

இப்போது ஆறு மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு மாவட்டத்தில் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி  இன்று நிறைவடையும் என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு 15 முதல் 20 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்களுக்கு தகவல் கொடுத்த அச்சகத்தின் தலைவர் அவை அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

Comments are closed.