400 கிலோ கடல் அட்டைகள் மாயம் – வனத்துறை ஊழியர் தலைமறைவு

நாகையில் வனத்துறையால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கடல் அட்டைகள் மாயமான விவகாரத்தில், தலைமறைவான வனத்துறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு வனத்துறையினர் நடத்திய சோதனையில், கடத்தல்காரர்களிடம் இருந்து 1,060 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், நாகை மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிரு்நதது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்ற வழக்கு தொடர்பாக, கடல் அட்டை இருப்பு குறித்து வனச்சரகர் அனந்தீஸ்வரன் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது 400 கிலோ கடல் அட்டைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக வனச்சரகர் அனந்தீஸ்வரன் போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையே, வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர் கோவிந்தராஜ் தலைமறைவாகி உள்ளதால், கடல் அட்டைகளை அவர் திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.