கோட்டாகம பகுதியில் ‘Gota’ அமைப்பாளரின் வடை பறிபோனது …. (Video)

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான ‘We want Gota’ அமைப்பாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டார்.

அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் “‘We want Gota’” என்ற வாசகம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியவாறு அந்த நபர் காணப்பட்டார்.

சந்தேகத்துக்குரிய அந்த நபரின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டன, அதன் மூலம் அவரது அடையாளம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு வடைகளை தயாரித்து கொடுத்து வந்தார். அவர் அங்கு வரும் மக்களுக்கு உணவில் இன்னல் ஏற்படும் ஏதாவது ஒன்றை கலந்து கொடுக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

காலிமுகத்திடலில் உள்ள ஆர்ப்பார்ட்டக்காரர்கள் இனந் தெரியாதோரை சமூகவலைத்தளங்கள் ஊடாக யார்? எவர் என அடையாளம் காணுகிறார்கள்.

அவர் ‘We want Gota’ அமைப்பாளர் ஒருவர் என உடனடியாக அடையாளம் கண்டதும் , பொதுமக்கள் அவரை போராட்டம் நடந்த இடத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபர் மக்களின் உணவில் விஷத்தை கலக்கக்கூடியவர் என்பதால், அவர் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த பொது மக்கள் , அவரை யாரும் தாக்காதவாறு பாதுகாத்து , போலீசாரின் கடும் எச்சரிக்கையை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.