கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் வாகனத்தை கடத்தியவர் கைது.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் தனது சொந்த வாகனத்தை தனது தோட்டக்காணி முற்றத்தில் நிறுத்தி வைத்திருந்த வேளை 17.04.2022 அன்று மாலை 3.50. மணியளவில் சந்தேக நபர் ஒருவரால் குறித்த கயஸ் ரக வாகனம் கடத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட வாகனம் A9 பிரதான வீதியூடாக சென்ற சமயம் வீதி போக்குவரத்து பொலிசார் மறித்தபோதும் நிறுத்தப்படவில்லை.ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் சோதனைக்காக நிறுத்திய போதும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக நிறுத்தாது சென்ற சமயம் இடை நடுவே ஹொரப்பொத்தான வீதிகளில் இரண்டு விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

அக்கராயன் பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசாரும் ஹொரவப்பொத்தான பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து 18.04.2022 அன்று இரவு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18.04.2022 அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.