கதிர்காம உற்சவம் ஆரம்பம் – முகூர்த்த கால் நடல் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா ஆரம்பமாவதனை முன்னிட்டு முகூர்த்த கால் நடல் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

ருஹூனு மகா கதிர்காம தேவாலயத்தின் இவ்வாண்டுக்கான ஆடிவேல் எசல விழாவை குறிக்கும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

சுகாதார தரப்பினரின் உத்தரவிற்களுக்கமைவாக எலச திருவிழாவானது அடுத்த மாதம் 21 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை பிரமாண்ட ஊர்வலத்துடன் நடைபெறவுள்ளது.

இதேவேளை நாட்டில் காணப்படும் அச்சுறுத்தல் காரணமாக கதிர்காம ஆலயத்திற்கான பாதயாத்திரைகள் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.