தீர்மானமிக்க கூட்டம் இன்று – தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் பொதுத்தேர்லுக்கான திகதியை தீர்மானிக்கும் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிடவார் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கட்டத்தின் பின்னர் நாளை மறுதினம் சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பான இறுதி முடிவை இன்றைய தினம் அறிவிப்பது குறித்து உறுதியாக கூற முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய நேற்றிய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.