டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு.

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் வீரர்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2-வது சுற்றுடன் வெளியேறிய போதிலும் அவரது ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. ஜோகோவிச் இதுவரை 366 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.

2-வது இடத்தில் டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), 4-வது இடத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 5-வது இடத்தில் சிட்சிபாசும் (கிரீஸ்) உள்ளனர். மான்ட்கார்லோ டென்னிசில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்போகினா 19 இடங்கள் எகிறி 27-வது இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் பிரிவில் டாப்-3 இடங்களில் முறையே இகா ஸ்வியாடெக் (போலந்து), கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்) மாற்றமின்றி தொடருகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.