உக்ரைன் – ரஷிய போர் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மாநாட்டில் அந்நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் லிஸ் டிரஸ் கலந்துகொண்டார்.

அப்போது கடந்த பிப்.,24ம் தேதி துவங்கி நடைபெறும் ரஷிய-உக்ரைன் போர் குறித்துப் பேசிய அவர், ரஷிய உக்ரைன் போர் இன்னும் 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

குண்டர்களை இயக்கும் கொடூரமான இயக்குனர் என்று அதிபர் விளாடிமிர் புதினை விமர்சித்த அவர் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பல ஆண்டு காலத்துக்கு நடைபெற உள்ள இந்த போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் போரில் புதின் வெற்றி பெற்றால், “ஐரோப்பா முழுவதும் கூறமுடியாத அளவுக்கும் துயரம் மற்றும் உலகம் முழுவதும் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.