யுவன் சங்கர்ராஜா ரத்தமும் சதையுமாக இசையமைத்துள்ளார்.. பொம்மை படம் குறித்து பகிர்ந்த எஸ் ஜே சூர்யா’

எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று இருப்பார்.

இந்த நிலையில் பொம்மை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ரத்தமும் சதையுமாக இசை அமைத்துள்ளார் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்பொழுது முழுநேர நடிகராக மாறியுள்ளார். ஹீரோவாக நடித்து வரும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி கொண்டுள்ளார். அந்தவகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார்.

ஏற்கனவே ஸ்பைடர் மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற சூழலில் அதை தொடர்ந்து மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. பொதுவாகவே ஹீரோக்களின் வசனங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் ஆனால் மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து ட்ரெண்டிங்கில் இருந்தது.

ஹீரோ, வில்லன் என மாறி மாறி பரிமாணங்களை கொடுத்து வரும் எஸ் ஜே சூர்யா இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் தற்போது நடித்து வருகிறார். மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ் ஜே சூர்யா பொம்மை படம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பொம்மை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அப்படத்தின் பிஜிஎம் பெருமளவு பேசப்படும் அதேபோல பொம்மை படமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உலகத்தரத்தில் இருக்கும் என எஸ் எஸ் சூர்யா நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை பொம்மை படத்தில் ரத்தமும் சதையுமாக இருக்கும் கட்டாயமாக இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.