பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு 5 கோரிக்கைகளை முன்வைத்தார். அவை,

1. தமிழ்நாட்டின் கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவ மக்களின் பாரம்பரிய மீன்படி பகுதியில் அவர்களின் உரிமைகள நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கு இது தகுந்த தருணம் என்பதை நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

2. 15.05.22 வரை தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை என்பது ரூ.14,006 கோடி. இந்த தொகையை விரைந்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

3. பல்வேறு மாநிலங்களில் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கும் இந்த காலத்தில் ஜிஎஸ்டி இழப்பிட்டை ஜூன் 2022க்கு பின்னரும் குறைந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

4.பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமாயாய் உலக செம்மொழிகளில் இன்றளவும் உயிர்ப்போடு விளங்கக்கூடிய தமிழை இந்திக்கு இணையாக அலுவல் மொழியாக, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

5. இறுதியாக மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் முறையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதுகுறித்து சட்டம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விரைந்து விளங்கிட வேண்டும் என பிரதமரை இந்த தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இந்த கோரிக்கையில் இருக்கக்கூடிய நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று நான் உளமாற நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.