அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லையாம் பிரதமர் ஊடகப்பிரிவு மறுப்பு.

ஊடக செய்திகளுக்கு அமைய, அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தவிதமான தீர்மானமும் எடுக்கவில்லை என்று பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என்று ஊடகங்களிலும், சமூக வலைத்தங்களிலும் செய்திகள் வெளிவந்திருந்த. பிரதமருக்கு நெருக்கமான சிங்களப் பத்திரிகைகளிலும் இன்று இந்தச் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், பிரதமர் ஊடகப் பிரிவு இதனை மறுத்துள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு இன்று முற்பகல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுத்துள்ளார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.

சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவு -செலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதேநேரம், சுகாதாரம் மற்றும் கல்வியைத் தவிர ஏனைய அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.