ரணில் நாடாளுமன்றத்தில் அடித்த பந்தை , அவுட் செய்த மஹேல

கிரிக்கெட் வீரர் டபிள்யூ.ஜி.கிரீஸ் சம்பந்தப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

கிரீஸ் சம்பந்தப்பட்ட சம்பவம் என்னவென்றால், ஒரு கிரிக்கெட் போட்டியில், கிரீஸ் மைதானத்துக்கு வந்து பெட்டிங் செய்ய சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார்.

நடுவர் அவர் அவுட் என்றார், ஆனால் கிரீஸ் மைதானத்தை விட்டு வெளியேறவில்லை.

“விளையாட்டு ரசிகர்கள் நீங்கள் எப்படி நடுவராக செயல்படுகிறீர்கள் என்பதைப் பார்க்க வரவில்லை, நான் எப்படி விளையாடுகிறேன் என்பதைப் பார்க்கவே வருகிறார்கள்” என்று கிரேஸ் நடுவரிடம் கூறிவிட்டு நடுவரது பேச்சை கேட்காது தொடர்ந்து ஆடத் தொடங்கினார்.

இந்த சம்பவத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் மஹேல ஜெயவர்தன ட்விட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதாவது பிரதமர் ரணில் , டபிள்யூ.ஜி.கிரேஸ் அளவுக்கு சிறந்தவர் இல்லை . அதேபோல இலங்கை விளையாட்டு ரசிகர்கள், ரணில் விக்ரமசிங்கவையோ அல்லது அவரைப்போன்ற தோல்வியுற்ற வீரர்களையோ மீண்டும் களத்தில் காண விரும்பமாட்டார்கள் என மஹேல டிவிட் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.