வீட்டில் இருந்தபடியே இனி ஆதார் கார்டை அப்டேட் செய்யலாம்.!

மொபைல் நம்பரை ஆதாருடன் இணைப்பது, பிற விவரங்களைப் புதுப்பித்தல் மற்றும் குழந்தைகளுக்கு 12 டிஜிட் ஐடியை வழங்குவதற்காக என்ரோல் செய்வது போன்ற ஆதார் சேவைகளை வீட்டு வாசலில் கொண்டு வர UIDAI உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய குடிமக்கள் தங்கள் தொலைபேசி எண்கள், முகவரிகள், பெயர்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போன்றவற்றை தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆதார் ஆவணத்தில் மாற்றுவதை எளிதாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் டோர்ஸ்டெப் வசதி மூலம் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமின்றி அப்டேட்களை எளிதாக செய்ய முடியும்.

தற்போது ஆதார் கார்டு யூஸர்களுக்கு அவர்களின் முகவரி போன்ற விவரங்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான ஆப்ஷனை UIDAI வழங்குகிறது. இருப்பினும் தொலைபேசி எண் அப்டேட்ஸ் அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் போன்றவற்றுக்கு யூஸர்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் ஆதார் அப்டேட் ப்ராசஸை எளிதாக செய்ய UIDAI அமைப்பானது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணிபுரியும் சுமார் 48,000 தபால்காரர்களுக்கு (postmen) சிறப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சியை முடிந்த பிறகு ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய விரும்பும் குடிமக்களின் வீட்டிற்கே சென்று வீட்டு வாசலில் ஆதார் அப்டேட் சர்விஸ்களை பயிற்சி பெற்ற தபால்காரர்கள் வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மொத்தம் 1.5 லட்சம் தபால்காரர்கள் தனித்தனி கட்டங்களாக பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆதார் கார்டு உள்ளவர்கள் அதில் மாற்றங்களை செய்ய உதவுவதோடு, இன்னும் ஆதார் திட்டத்தில் பதிவு செய்து கார்டு வாங்காத தனிநபர்களுக்கு புதிய ஆதார் அட்டைகளை உருவாக்கவும் பயிற்சி பெற்ற தபால்காரர்கள் உதவுவார்கள்.

ஊடக அறிக்கைகளின் படி இந்த பணிகளில் ஈடுபட உள்ள தபால்காரர்கள் டிஜிட்டல் கேஜெட்ஸ, டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் அடிப்படையிலான தகுந்த டிஜிட்டல் உபகரணங்களுடன் கூடிய ஆதார் கிட் (Aadhar kit) கொண்டிருப்பார்கள். ஆதார் கார்டுதாரர்களின் விவரங்களை அப்டேட் செய்வதற்கு மேலே குறிப்பிட்ட டூல்ஸ்களை தபால்காரர்கள் பயன்படுத்தலாம். அதே போல சிறப்பு பயிற்சி பெறும் தபால்காரர்கள் குழந்தைகளும் ஆதார் கார்டுகளை பெறும் வகையில் ஆதார் எண் வழங்குவதற்காக குழந்தைகளை பதிவு செய்யும் பணியிலும் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் 755 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் Aadhaar Sewa Kendra-வை திறப்பதை UIDAI நோக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தகவல் தெரிவித்து இருக்கும் அரசு மூத்த அதிகாரி ஒருவர், இதுவரை குழந்தைகளை ஆதாரில் சேர்க்க டேப்லெட் மற்றும் மொபைல் அடிப்படையிலான கருவியைப் பயன்படுத்தி IPPB தபால்காரர்களில் பைலட்களை இயக்கி வருகிறோம். லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி தொலைதூரப் பகுதிகளில் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில் இப்போது அதை விரிவுபடுத்துவோம் எனக்கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.