மக்கள் சிறையில் …. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்! பொலிஸாருக்கு சனத் ஜயசூரிய எச்சரிக்கை!

முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவரான சனத் ஜயசூரிய, அண்மைக்காலமாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் , தனது டுவிட்டர் பதிவில், இந்த நாட்டில் துன்பப்படும் மற்றும் அப்பாவி மக்களை பாதுகாப்பதே காவல்துறையின் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

அதை மனதில் கொண்டு காவல்துறை நியாயமாக செயல்பட வேண்டும் .

வன்முறையற்ற போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறை செயல்படக் கூடாது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நாங்கள் அனைவரும் கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் இருக்கிறோம் என்று காவல்துறையினரிடம் சுட்டிக்காட்டிய சனத், எந்த நேரத்திலும் முழு சூழ்நிலையும் வேறுவிதமாக வெடிக்கலாம் என அண்மைக்கால போலீசாரது வன்முறைகளை கண்டு தனது கருத்தை எச்சரிக்கையாக டுவிட் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.