மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்புகளால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குணமடைந்து வீடு திரும்பினார்.

சோனியா காந்திக்கு ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மூக்கில் ரத்தம் வெளியானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, சோனியா காந்திக்கு மூச்சுக்குழாயில் பூஞ்சைத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான ஜெய்ராம் ரமேஷ், மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி நேற்று மாலை வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.மேலும், சோனியா காந்தி வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாளை மறுதினம் ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.