வரிசைகளை ஒழிக்க ’21’ மிகவும் அவசியம் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்து.

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வரிசைகளை இல்லாதொழிக்க அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் மிகவும் அவசியம் என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“21 ஆவது திருத்தச் சட்டம் தின்பதற்கா எனப் பலரும் கேட்கிறார்கள். ஆம், தின்பதற்குத்தான்.

இன்று வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் நிற்கின்றார்கள்.

21ஆவது திருத்தச் சட்டம் ஊடாகவே அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் ஏற்படும். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலே மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும். இதனூடாகவே நாட்டில் வரிசைகளை இல்லாதொழிக்க முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.