எரிபொருள் விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கப்படும்

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இது ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான பெற்றோல் மற்றும் டீசல் லீற்றர் ஒன்றிற்கு தோராயமாக 60 ரூபாவினாலும் , ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் லீற்றர் 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

முன்மொழியப்பட்ட விலை உயர்வு பின்வருமாறு.

92 பெட்ரோல் – 74 ரூபாய்
95 பெட்ரோல் – 78 ரூபாய்
ஆட்டோ டீசல் – 56 ரூபாய்
சூப்பர் டீசல் – 65 ரூபாய்

எரிபொருளின் தற்போதைய விற்பனை விலைகள் பின்வருமாறு

92 பெட்ரோல் – ரூ.420
95 பெட்ரோல் – ரூ.450
ஆட்டோ டீசல் – ரூ.400
சூப்பர் டீசல் – ரூ.445

Leave A Reply

Your email address will not be published.