தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் மனு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கியது முதலே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய வேண்டும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். எனினும் தீர்மானங்களை, நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் அறிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனிடையே, பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில், பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கத்துடன் கிழே இறங்க ஓபிஎஸ் எழுந்தார். அப்போது, மைக்கில் பேசிய வைத்திலிங்கம், ‘சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம்’ என்று பேசியதோடு ஓபிஎஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.

அதனத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனித்தனியாக முகாமிட்டனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரில், அதிமுக தலைமையை சட்ட விரோதமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.