பெண் போராளிகளான ஹிருணிகா மற்றும் மைத்திரி

ரணில் அண்மையில் தனது மாமாவின் பத்திரிக்கையான டெய்லி மிரருக்கு வித்தியாசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுடன்  தனது வீட்டை முற்றுகையிட வந்த ஹிருணிகா பிரேமச்சந்திரவை சமூக வலைத்தளங்களில் அவமதிக்காதீர்கள் என்பதாகும்.

ரணிலின் வீட்டை முற்றுகையிட வந்த ஹிருணிகா உள்ளிட்ட பெண்களை,  பொலிஸாரை குவித்து துன்புறுத்தியவர் ரணில்.

ரணிலின் வீட்டிற்கு வந்து பொலிஸ் பலவந்தமாக பாதுகாப்பு வழங்கப் போவதில்லை.

நாட்டின் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தனது வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படுவதை அறிந்தால், அவர்கள் போராட்டத்திற்கு அனுமதி அளித்து மௌனம் சாதிப்பார்கள்  அல்லது போராட்டத்தை அடக்க போலீசாரை வரவழைப்பார்கள்.

ரணில் இரண்டாவது முறையை  தேர்ந்தெடுத்தார். அதாவது போலீசாரை வரவழைத்தார்.
A bouquet for Maithree | Sunday Observer

இப்படி தேர்ந்தெடுத்த ரணில் வேறு யாருமல்ல, தெற்காசியாவில் பெண் விடுதலை, பெண்களின் அரசியலுக்கான உரிமை, பெண்களின் தலைமைத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விரிவுரை ஆற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் கணவராவார்.

பொதுவாக ஐ.தே.க.வின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் போது பெண்கள் தொடர்பான கொள்கையை மைத்திரி விக்ரமசிங்கவே முன்வைப்பார்.

திருமதி. மைத்திரியின் தலையீட்டினால் இலங்கையில் அரசியல் கட்சிகளின் கொள்கை அறிக்கைகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. கொள்கை அறிக்கையில் பெண்களைப் பற்றிய தனிப் பிரிவு இடம்பெற்றுள்ளதால், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் ஒருமுறை தனது கணவர் தனது பாலியல் ஆசைகளைத் தொடர அனுமதிக்க மறுப்பதைப் பாதுகாக்கவும், காவல்துறைக்குச் செல்வதற்கான அவரது உரிமையைப் பாதுகாக்கவும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கொள்கைப் பிரகடனத்தை வகுத்த குழு உறுப்பினர்கள், மேற்குலக நாடுகளுக்கு ஏற்றது என்றாலும், இலங்கைக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தனர். மேலும், ஐ.தே.க பெண் விடுதலை ஆர்வலர்களை செயற்குழுவில் சேர்க்குமாறு அவர் ,  ரணிலை வற்புறுத்தினார்.
SRI LANKA'S FEMALE LABOUR FORCE LAGGING BEHIND | Daily News

2015ஆம் ஆண்டு ரணில் பிரதமராக பதவியேற்ற பின்னர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பெண் விடுதலை தொடர்பான விரிவுரைகளை நடத்த அழைப்பு வந்தது. பெண்களின் உரிமைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைக்காக விருதுகளையும் பெற்றார்.

பெண் விடுதலைக்கான செயற்பாட்டாளர் மட்டுமன்றி களனிப் பல்கலைக்கழகத்தின்   பேராசிரியராகவும் ரணிலின் மனைவியான மைத்ரி உள்ளார். 

அவர் FUTA அல்லது பல்கலைக்கழக டாக்டர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக சம்பள அதிகரிப்பு கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டார். 

எனினும் கடந்த மே மாதம் கோட்டா ,  ரணிலை பிரதமராக நியமித்த போது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

மக்கள் வாக்குகளை இழந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கியமை நெறிமுறையற்ற செயல் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘மைத்திரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்கிறாரா?’

எனக்கு தெரியாது. எனினும், ரணில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் போது மைத்திரியும் உடனிருந்தார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரணில் தோல்வியடைந்ததையடுத்து ரணிலின் மனைவி மைத்திரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது ,  மகிந்த, ஷிரந்தி, நாமல் ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர். ரணில் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என மஹிந்த விடுத்த கோரிக்கைக்கு மைத்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக ரணிலின் மாமாவின் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

‘ மைத்திரியின் எதிர்ப்புக்கு மத்தியில் ரணில் நாடாளுமன்றத்திற்கு வந்தாரா ?’

அது அந்த இருவருக்கு மட்டுமே தெரியும்.

1988ல் மூன்றாவது முறையாக ஜே.ஆர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தபோது, ​​ஜே.ஆரின் மனைவி எலினா ஜெயவர்த்தன அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

மூன்றாவது தவணைக்கு போட்டியிடுவதற்கு தேவையான அரசியலமைப்பை மாற்ற ஜே.ஆர் ஒரு குழுவை நியமித்த போதிலும், எலினா ஜே.ஆருடன் பேசி சமாதானப்படுத்தி அதை நிறுத்தினார்.

சஜித்தின் தந்தையான , ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு ஜே.ஆருக்கு அழுத்தங்களை கொடுத்த மிக முக்கிய செல்வாக்கு செலுத்தியவர்களில் எலினாவும் ஒருவராவார்.

எலினா போன்று மைத்திரியை அரசியலில் இருந்து விலகச் சொல்ல அல்லது  ரணிலை வற்புறுத்தி தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றம் செல்லாமல் தடுக்கும்  பலம் ரணிலின் மனைவியிடம் இருந்ததா எனத் தெரியவில்லை. Hirunika's protest outside Ranil's house blocked - The Morning - Sri Lanka News

ஆனால், ஹிருணிகா அவர்களது வீட்டை முற்றுகையிட  வந்தபோது, ​​காவல்துறையை வரவேண்டாம் என்று கூறியிருக்கலாம் அல்லது  ஹிருணிகாவை பொலிசார்  துன்புறுத்துவதை தடுத்திருக்கலாம்.

‘மைத்ரி ஏன் அப்படிச் செய்யவில்லை?’

Former Sri Lankan prime minister Ranil Wickremesinghe and his wife professor Maithree Wickremesinghe with their pet Dogs! 😇😇😇😇😇😇😊😊😊😊😊😊💚💚💚💚💚💚💚🐶🐶🐶🐶🐶🐕🐕🐕🐕! - Pakistan and Sri Lanka

அதை அவரிடம் இலங்கையில் உள்ள பெண்கள் அமைப்புகள்தான் கேட்க வேண்டும். இலங்கையில் பெண் விடுதலை பற்றி பேசும் பல பெண்கள் அமைப்புகள்  கொழும்பை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.

ஜனவரி 25, 2020 அன்று, பெண்கள் அமைப்புகளின் குழு ரணிலின் மனைவியான மைத்ரிக்கு ஒரு கடிதம் எழுதியது. அது ‘கொலம்போ டெலிகிராப்’ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது, நாட்டின் மிகப் பெரிய கட்சியான ஐ.தே.க.வை அழிக்க வேண்டாம் என ரணிலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெண்கள் அரசியலில் ஈடுபடும் உரிமை குறித்து பேசிய அவர், பெண்களை அரசியலில் கொண்டுள்ள கட்சியான ஐ.தே.க.வை அழிக்க வேண்டாம் என தனது கணவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மைத்ரி , அரசியல் செய்யாத கணவனின் மனைவி என்ற கதையில் உண்மையில்லை.

2015-2019 அரசாங்கத்தின் போது, ​​அமைச்சர் பதவிகளை மாற்றுமாறு அவர் அழுத்தம் கொடுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன.

தேசியப்பட்டியலில் இருந்து ரணில் நாடாளுமன்றத்துக்கு வருவதையோ, பிரதமராக வருவதையோ தடுக்க முடியாது என நினைத்தாலும், ஹிருணிகா உள்ளிட்ட போராட்டம் நடத்திய பெண்களை பொலிசார் முற்றுகையிட்டு துன்புறுத்துவதையாவது  தடுக்க முடிந்திருக்க வேண்டும்.

ஹிருணிகாவை  அவமானப்படுத்த வேண்டாம்  (Don’t insult Hirunika – PM’s appeal) என அவரது கணவரான ரணில் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ள கருத்து , ஹிருணிகாவை அவமானத்துக்கு உள்ளாக்குவது போலவே உள்ளது . 

இங்கு மைத்திரி விக்கிரமசிங்கவிற்கு , பெண் விடுதலையை விட முக்கியமானதாக  கணவர் இருந்திருக்கலாம். அதில் தவறில்லை.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.