குருநகர் மீனவர் ஊர்காவற்றுறைக் கடலில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைக் கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குருநகர், ஐஸ்பழ வீதியைச் சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தரான இவர், தனது கடற்றொழில் உபகரணங்களைச் சரி செய்த பின்னர் கடலுக்குச் சென்றிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதே பரிசோதனைக்காகச் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.