முதலில் நாட்டை மீட்போம்; பிறகு அரசியல் செய்வோம் – கட்சிகளிடம் ரணில் வேண்டுகோள்.

“நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்துச் செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.”

இவ்வாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதியாக இன்று நண்பகல் பதவியேற்ற பின்னர் ஆற்றிய விசேட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்தக் குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன்.

அரசமைப்புக்கு அப்பால் சென்று செயற்படத் தயாரில்லை.

அடுத்த வாரம் தெரிவாகும் புதிய ஜனாதிபதிக்கு ’19’ ஐ விரைவில் முன்வைக்கக் கூடியதாக இருக்கும்.

போராடும் உரிமை உள்ளது. வன்முறையை அனுமதிக்க முடியாது.

போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.