மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மின்வாரிய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் நாளன்று, வேலை நிறுத்தத்தில் ஈடுபட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம் பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் நாளன்று, மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தம் செய்வார்கள் என மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.