தொண்டமானாறு ஆற்றில் முதலைகள்; பக்தர்கள் அவதானமாக நீராட வேண்டும்.

யாழ்., வடமராட்சி – தொண்டமானாறு ஆற்றில் நீராடுபவர்களை அவதானமாகச் செயற்படுமாறு தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஆலய மகோற்சவத்துக்கு வெளிநாடுகளிலிருந்தும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் பலர் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில், செல்வச்சந்நிதி ஆலயத்துக்குப் பின்புறமாக உள்ள ஆற்றில் முதலைகள் இருப்பது தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும், இதன் காரணமாக அங்கு நீராடுபவர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.