மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபச் சாவு!

சீரற்ற காலநிலை காரணமாக, பேராதனை – தவுலகல – யாலகொட பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீடொன்றின் மீது வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு பெய்த கடும் மழையின்போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்தது.

இதன்போது, படுகாயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.