மகாராணிக்கு,ஜனாதிபதி ரணில் மற்றும் அவரது மனைவி இறுதி அஞ்சலி (காணொளி)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் சற்று முன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நாளை (19) வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவஸ்தானத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி, மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவகாசம் நாளை காலை உள்ளூர் நேரப்படி 6.30 மணியுடன் முடிவடைகிறது.

ராணியின் உடல் உள்ளூர் நேரப்படி காலை 10.44 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் அரச குடும்பத்தாரும் அணிவகுத்துச் செல்வார்கள்.

இதற்கிடையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த காத்திருக்கும் மக்களை சந்தித்தனர்.

7 தசாப்தங்களாக பிரித்தானியாவை ஆட்சி சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.