ஆசிரியர் நியமன முறைகேடு: ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், ரூ.48.22 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

குடியிருப்புகள், பண்ணை வீடுகள், நிலப்பரப்புகள் என 40 கோடி மதிப்புள்ள 40 அசையா சொத்துகள், 35 வங்கிக் கணக்குகள் என 48.22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துடக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியுள்ளது.

இந்த சொத்துக்கள் அனைத்தும், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் முறைகேடாக வாங்கியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 23-ஆம் தேதியிலிருந்து இருவரும் அமலாக்கத் துறை காவலில் இருந்து வந்தனா்.

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான வழக்கில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அா்பிதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகைகள், தங்கக் கட்டிகள், நிலம், கட்டடங்கள், பண்ணைவீடு சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.