இலங்கையரல்லாத டயனா எப்படி இராஜாங்க அமைச்சரானார்? : ஆனந்த சாகர தேரர் (Video)

ஜனாதிபதியினால் இராஜாங்க அமைச்சர் பதவியைப் பெற்ற டயானா கமகேவிற்கு இலங்கையில் குடியுரிமை இல்லை எனவும், இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத ஆவணங்களை சமர்ப்பித்து அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

டயனா இன்னும் இங்கிலாந்து குடியுரிமை மட்டுமே உள்ளவர் எனவும் , இலங்கையில் வாழ வீசா கூட எடுக்காமல் போலி ஆவணங்களை சமர்பித்து அரசியலில் ஈடுபட்டுள்ளதான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கும் டயானா கமகேவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி எவ்வாறு வழங்கப்பட்டது என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் ஆனந்த சாகர தேரர் மேலும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.