இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் கனேடிய, பிரான்ஸ் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் நேரில் பேச்சு!

இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் தனித்தனியாகச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது தமது பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோருடன் நல்லெண்ணம் அடிப்படையில் பேச்சில் ஈடுபட்டார்.

டேவிட் மெக்கினொன் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் இலங்கைக்கான கனேடியத் தூதுவராகவும், எரிக் லவேர்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.