ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறினால் முதலமைச்சர் பதவி – சிபிஐ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினால், முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சிபிஐ விசாரணையின்போது அதிகாரிகள் கூறியதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் மதுபான கொள்கையை வெளியிட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.இதுதொடர்பாக மாநில துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

சுமார் 9 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, ஆம்ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினால், முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும், இல்லாவிட்டால், இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக குற்றம்சாட்டினார். ஆனால், பாஜகவுக்காக ஆம்ஆத்மியிலிருந்து வெளியேறப் போவதில்லை என்று கூறியதாக சிசோடியா தெரிவித்தார்.

மணீஷ் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சிசோடியாவிடம் சட்ட ரீதியாகவும், தொழில் முறைப்படியுமே விசாரணை நடத்தப்பட்டதாகவும், சட்டப்படி விசாரணை தொடரும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.