ரணில் நிரந்தர தீர்வை வழங்கினால் வரலாற்றில் நிலைத்திருப்பார்!

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசமைப்பு மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கினால் சரித்திரத்தில் நிலைப்பார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாட்டையும் மக்களையும் வளப்படுத்த ஒரே வழி பல்லின மக்களையும் நல்லிணக்கச் செயற்பாடுகள் மூலம் ஐக்கியப்படுத்த வேண்டும். அதனைச் செய்வதாயின் இன, மத சார்பற்ற அரசமைப்பும், ஆட்சி முறையும் இந்த நாட்டில் மலர வேண்டும்.

மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழவேண்டுமாயின் தேசிய இனப்பிரச்சினை நியாயமாகவும் – நிலையாகவும் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சரித்திரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலைப்பார். இல்லையென்றால் அவர் நிலையார் என்பதை அவரே அறிவார்.

சமத்துவம், சமவுரிமை இல்லாத நாட்டில் மகத்துவம் விளையாது என்பதே 74 ஆண்டுகள் நாம் பெற்ற படிப்பினையாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.