ஒரு கொள்ளையருக்கு சூடு . இன்னொருவர் வைத்தியசாலையில்….

கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய இருவரில் , ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது.

22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியதையடுத்து போலீசார் அவர்களை துரத்திச் சென்றுள்ளனர்.

அப்போது சந்தேகநபர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பின்னர் அவர்களில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்னோர் சந்தேக நபர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.