ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ஜெர்மன் அதிபர் வால்டர்.

ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்- வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உக்ரைனுக்கு திடீர் பயணமாக வந்தடைந்தார்.

பிப்ரவரி 24ம் தேதி அன்று ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு ஜெர்மனர் அதிபர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும். இதுகுறித்து ஜெர்மன் அதிபர் கூறுகையில், “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக” குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், “உக்ரைன் மக்களுக்கு எனது செய்தி: நீங்கள் ஜெர்மனியை நம்பலாம்!” என்றார். ஸ்டெய்ன்மியர் மேலும் கூறுகையில், ராணுவ ஆதரவைத் தவிர, குளிர்காலம் வருவதற்கு முன்பு, மின் கட்டமைப்புகள், நீர் குழாய்கள் மற்றும் வெப்ப மூட்டும் அமைப்புகள் போன்ற அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை சரி செய்வதில் தனது பயணம் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.