இன்றைய ஆர்ப்பாட்ட அசம்பாவிதங்களை, தடுத்த போலீஸ் உத்தியோகத்தர்கள்

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை விரட்டுமாறு மேற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வழங்கிய சட்ட விரோதமான உத்தரவை பின்பற்றாமல் களத்திலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விவேகத்துடன் செயற்பட்டதால் நாட்டிற்குள் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .

போராட்ட இடத்திற்கு வராமல், வேறோர் இடத்தில் இருந்து கொண்டு, மேற்கு பொலிஸ் உயர் அதிகாரி தொடர்ந்து விதித்துக் கொண்டிருந்த , சட்டவிரோத உத்தரவுகள் குறித்து, களத்தில் உள்ள அதிகாரிகள், காவல் துறை மா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

அங்கு, நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நிலைமையை நிர்வகிக்குமாறு பொலிஸ் மா அதிபர் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

சில அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காக இன்று காலை முதல் இந்த போராட்டத்தை தடுக்க சில உயர் பொலிஸ் அதிகாரிகள் மிகவும் மலிவான தந்திரோபாயங்களை கையாண்டு நாட்டின் முன் நகைச்சுவையாக ஆகியுள்ளனர்.

இதன்போது, ​​மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிராக பொலிஸார் செயற்படுவதாக தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க குழுக்கள் நிறுத்தப்படும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவித்திருந்தது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, அமைதியான போராட்டங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும், அது மக்களின் உரிமை எனவும் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.