நாட்டுக்கு திரும்பியதும் வாக்களித்த ஜனாதிபதி.

வெசாக் விழாவில் கலந்துகொள்ள வியட்நாம் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று காலை வியட்நாமில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய கையோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தார்.
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக, விமானத்தில் இருந்து தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி தனது வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
கொழும்பு, பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை அளித்தார்.