சீரற்ற காலநிலையால் 685 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் குறித்த மாவட்டங்களில் 177 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.