பொசன் பூரணை தினத்தையொட்டி வவுனியாவில் 22 இடங்களில் இன்று தன்சல் வழங்கிவைப்பு.

பௌத்த மக்களின் விசேட தினமான பொசன் பூரணை தினத்தையொட்டி வவுனியாவில் இன்று 22 இடங்களில் தன்சல் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத்தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது குளிர்பானம், ஐஸ்கிறீம், கடலை, பாணும் சம்பலும், புரியாணி, சோறு கறி எனப் பல்வேறு உணவுப் பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

விசேட நிகழ்வாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் 3 ஆயிரத்து பேருக்குப் பிரியாணி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில மதத்தலைவர்கள், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயமுனி சோமரத்ன, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, பொலிஸ் அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுதாயப் பொலிஸ் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதனைப் பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.