ரணில் – மனோ தரப்பு அவசர சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுவினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது பற்றி உரையாடல் இடம்பெற்றது என்று கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க நாளை ரஷ்யா செல்லவுள்ளதால் இந்தச் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறிய கூட்டணி தரப்பு, உள்ளூராட்சி மன்ற விவகாரம் தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.