கெஹலிய குடும்பம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல குடும்பத்தினர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று மாலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.