மத்திய கிழக்கில் பதற்றம்: கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளில் பாதிப்பு
இன்று (24) காலை 05.00 மணியளவில், குவைத் நாட்டிலிருந்து இயக்கப்படும் கத்தார் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை தங்கள் விமான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தோஹா, கத்தார் மற்றும் குவைத் நகர விமான நிலையத்திற்கான விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கத்தார் மாநிலத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கத்தாரின் வான்வெளியை மூட கத்தார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதே இதற்குக் காரணம்.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தற்போது வழக்கம் போல் வந்து கொண்டிருக்கின்றன என்று விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
