பூஸா சிறைக்கூண்டினுள் தூக்கில் தொங்கிய கைதி ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைக்கூண்டினுள் இருந்து தூக்கிட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டதையடுத்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கைதியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.