கனடா செல்லும் ஆசையில் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு.

கனடா நாட்டுக்குச் செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த செல்வராசா பாஸ்கரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கனடா செல்வதற்காகக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா பணத்தை அவர் வழங்கியுள்ளார்

இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீளத் தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீளத் தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால், விரக்தியில் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்

அதனை அவதானித்த வீட்டார், அவரை மீட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.